"பாஜக, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கப் பார்க்கிறது"- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"சிஏஏ, என்பிஆர் மூலம் குழப்பதை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் முயற்சி"
பாஜக, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கப் பார்க்கிறது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
புதுச்சேரியில், எதிர்க்கட்சியே கிடையாது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க அங்கு சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ஜனநாயக நாட்டில், மதத்தின் பெயரால் மக்களை பாஜக பிரிக்க பார்ப்பதாக கூறினார். புதுச்சேரியில், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தடுப்பதாக கூறிய அவர், தங்களின் அரசுக்கு எதிர்க்கட்சியே இல்லை என்றும், கிரண்பேடி அவ்வாறு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்