தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி - வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைப்பு

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி - வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைப்பு
x
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பி.எப்., எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஆண்டுதோறும், சி.பி.டி., எனப்படும் மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயித்து வருகிறது. இந்தநிலையில், பி.எப்.,க்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் சிபிடி அமைப்புக்கும் நிதி அமைச்சகம் பரிந்துரைத்தது. அதன்படி, 2019-20 ஆண்டிற்கான வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக, சிபிடி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்