நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
x
குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில், கடந்த 27 ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  அதனை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார். இதன் மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்