முஸ்லீம் திருமண அழைப்பிதழில் 'ராதே-கிருஷ்ணா' - விநாயகர் படமும் இடம் பெற்றிருந்த ஆச்சரியம்

உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த முகமத் சரபாத் இல்ல திருமண அழைப்பிதழ் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம் திருமண அழைப்பிதழில் ராதே-கிருஷ்ணா - விநாயகர் படமும் இடம் பெற்றிருந்த ஆச்சரியம்
x
உத்தரபிரதேச மாநிலம், ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த முகமத் சரபாத் இல்ல திருமண அழைப்பிதழ் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது மகள் திருமண அழைப்பிதழில், விநாயகர் மற்றும் ராதா-கிருஷ்ணர் படங்களை அச்சிட்டுள்ளார் முகமது சரபாத். 'வகுப்புவாத வெறுப்பு வளர்ந்து வரும் போது, இந்து - முஸ்லீம் நட்பை வெளிப்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும்' என, முகமது தெரிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு, உறவினர்களும், நண்பர்களும் வரவேற்றுள்ளனர். இந்த திருமணம் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்