"வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" - துணைநிலை ஆளுநர் உத்தரவு

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.
வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - துணைநிலை ஆளுநர் உத்தரவு
x
வன்முறைக்கு பிந்தைய வட கிழக்கு டெல்லியின் சூழ்நிலையை ஆய்வு செய்து, துணைநிலை ஆளுநர் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

* இதன்படி, வன்முறை பாதித்த பகுதியில் போதுமான பாதுகாப்பு, ரோந்து பணியோடு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

* வன்முறையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும்

* பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து எறியப்பட்ட கற்கள், எரியூட்டப்பட்ட வாகனங்கள், குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

* வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில்  பால், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 
* காவல்துறை சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையர் தலைமையில், 3 சிறப்பு ஆணையர், 6 இணை ஆணையர், 1 கூடுதல் ஆணையர், 22 துணை ஆணையர், 20 உதவி ஆணையர், 60 காவல்  ஆய்வாளர், 1400 காவலர் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையின் 60 கம்பெனிகள், 7 ஆயிரம் மத்திய துணை ராணுவப் படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்