டிரம்ப் வருகையையொட்டி 400 மீட்டர் நீள சுவர் கட்டும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
அகமதாபாத் நகரில் ஒரு சேரி பகுதியை மறைக்கும் வண்ணம் 400 மீட்டர் தொலைவுக்கு சுவர் எழுப்பப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பல்வேறு ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் இருந்து ஹலோ டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியம் வரையிலான பகுதியை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பாதையில் உள்ள ஒரு சேரி பகுதி, டிரம்ப் கண்ணில் படாமல் இருப்பதற்காக 400 மீட்டர் தொலைவுக்கு 8 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த பணியில் 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் அழகுப்படுத்தும் நோக்கில் இந்த சுவர் எழுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ள நிலையில், இந்த நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சேரி பகுதியில் வசிக்கும் மக்களை புழு, பூச்சி போன்று நினைக்க வேண்டாம் என்றும், அவர்களும் மனிதர்கள் தான் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story