அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்க சிறப்பான ஏற்பாடு : அகமதாபாத் ஸ்டேடியத்தில்" நமஸ்தே டிரம்ப்" பிரமாண்ட வரவேற்பு

குஜராத் வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்க சிறப்பான ஏற்பாடு : அகமதாபாத் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் பிரமாண்ட வரவேற்பு
x
குஜராத் வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24-ந்தேதி வாஷிங்டன்னிலிருந்து  நேராக அகமதாபாத் வருவதாகவும், மொடேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள  கிரிக்கெட் ஸ்டேடியத்தில்  நமஸ்தே டிரம்ப் என்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் , அது வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும் என்றும் விஜய்ரூபானி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்