தாஜ்மஹாலை பார்வையிடுகிறாரா அதிபர் டிரம்ப்? : புது பொலிவு பெறும் ஆக்ரா
இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், டிரம்ப் வரும் 24 ஆம் தேதி தாஜ்மஹாலை பார்வையிட இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், kheria விமான நிலையத்தில் இருந்து தாஜ்மஹால் செல்லும் வழித்தடத்தில் உள்ள சுவர்களில் வண்ணம் பூசுதல், மின்சார கம்பங்கள் மற்றும் சாலைகளை சரி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Next Story