மாசி மாத பூஜை - ஐயப்பன் கோவில் நடை திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.
மாசி மாத பூஜை - ஐயப்பன் கோவில் நடை திறப்பு
x
கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் முடிந்து கடந்த மாதம் 21 தேதி நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, மாலை 5 மணிக்கு கோவில் நடையை திறந்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். புதன் இரவு 11 மணிக்கு  நடை அடைக்கப்பட்டு, வியாழக்கிழமை  காலை 3 மணிக்கு நடை திறக்குப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். 18 தேதி இரவு 11 மணிவரை நடைதிறக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்