தெலங்கானா : பக்கத்து வீட்டுக்காரர் மீது ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டா மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை, ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா : பக்கத்து வீட்டுக்காரர் மீது ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
x
தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டா மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை, ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சதானந்தம் என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் உள்ள கங்கராஜூ என்பவருக்கும் கடந்த ஒரு வாரமாக வீட்டு மத்தியில் உள்ள சுவர் காரணமாக, தகராறு இருந்துள்ளது. நேற்று இரவு வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில், இன்று காலை, கங்கராஜூ, ஏகே47 துப்பாக்கியால், சதானந்தம் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் சதானந்தம் மற்றும் குடும்பத்தினர் தப்பித்த நிலையில், ஏகே47 துப்பாக்கி எப்படி கங்கராஜூவுக்கு கிடைத்தது என்பது தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்