அமெரிக்க நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தடை - பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆர்த்தி ராவ் மீது நித்யானந்தா தரப்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தடை - பெங்களூர் நீதிமன்றம்  அதிரடி உத்தரவு
x
நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் தொடர்ந்த பாலியல் வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நித்தி ஆசிரமம் சார்பில், ஆர்த்தி ராவுக்கு எதிராக கொலம்பஸ் நகர நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. காப்புரிமை பெற்ற யோகாசன கலைகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ஆர்த்திராவ், 3 கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருமாறு கோரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆர்த்தி ஆஜராகததால், நித்தியானந்தாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அமல்படுத்தி நஷ்ட ஈடு தொகையை பெற்றுத் தர உத்தரவிடக் கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தரப்பு முறையிட்டது. இதுதொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அமெரிக்க தீர்ப்பை செயல்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது. Next Story

மேலும் செய்திகள்