கொரோனா பாதிப்பு: "அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது" - கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் உள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சர் ஷைலஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
x
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி திருச்சூர் மருத்துவமனையில் உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள அமைச்சர் ஷைலஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அவர், நிலைமையை அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும், திருச்சூரில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோல, கேரளாவில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறினார்​. அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைத்துள்ளதாகவும், வுகானிலிருந்து திரும்பிய 106 பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவுத் அமைச்சர் ஷைலஜா கூறினார். மத்திய அரசின் உதவியை கோரியுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்