குடியுரிமை திருத்த சட்டம் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவருக்கு கோரிக்கை
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் அக்கடிதத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story