காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் : அதே கத்தியால் குத்திக்கொண்டு தானும் தற்கொலை

கேரள மாநிலம் காரக்கோணம் பகுதியில் காதலியை கழுத்தறுத்து கொன்று, காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் : அதே கத்தியால் குத்திக்கொண்டு தானும் தற்கொலை
x
தமிழக - கேரள எல்லையான காரக்கோணம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அனுவும், ஆஷிதா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து  வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆவேசமடைந்த அனு, ஆஷிதாவின் வீட்டிற்குள் புகுந்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ஆஷிதா அலறவே, அனுவும் தனது கையிலிருந்த கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும், கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்