டெல்லி நேரு பல்கலைகழகத்தில் பரபரப்பு...

டெல்லி ஜே.என்.யூ. பல்கலைகழகத்திற்குள் முகமூடி அணிந்து புகுந்த ஏபிவிபி மாணவர் அமைப்பினர், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
டெல்லி நேரு பல்கலைகழகத்தில் பரபரப்பு...
x
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைகழகத்தில் முகமூடி அணிந்து கொண்டு புகுந்த ஏபிவிபி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவ பேரவை தலைவர் அய்ஷி கோஷ் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். பின்னர் இரும்பு தடிகளை கொண்டு கண்ணில் சிக்கியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காயம்  அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலை கண்டித்து ,மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பல்கலைகழகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்,  பல்கலைக்கழகத்துக்குள்ளேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் நாடு எப்படி முன்னேறும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்