கேரளாவில் மீன்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லறை

கேரளாவில் அழிந்து வரும் மீன்களை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக கல்லறை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் மீன்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லறை
x
இறந்துபோன மனிதர்களுக்காக தான் கல்லறைகள் கட்டப்படும். செல்லப் பிராணிகள் மீது கொண்ட அளவு கடந்த பிரியத்தால் கூட சிலர் அவற்றுக்கு கல்லறைகள் கட்டுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது மீன்களுக்காக முதல் முறையாக ஒரு கல்லறை அமைக்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மீன்களுக்கான இந்த கல்லறை. காற்று மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதால் நீராதாரம் மாசுபடுகிறது. இதனால் குளம், ஏரி, கடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன்கள் பாதிக்கப்படுகின்றன. கடலில் வாழும் அரிய வகை மீன்கள் அழிந்து வருகின்றன. இதையடுத்து இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோழிக்கோட்டில் கல்லறை உருவாக்கப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகள் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்