அசாமில் தொடரும் போராட்டம் : போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, அசாம் மாநிலத்தில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாமில் தொடரும் போராட்டம் : போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி
x
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, அசாம் மாநிலத்தில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கவுகாத்தி, திப்ரூகர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் வாகனங்கள் மீது தாக்குத​ல் நடத்தியதை தொடர்ந்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரை கலைத்தனர். இதனிடையே, கவுகாத்தியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், போராட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்தனர். அசாமில் பதற்றம் நீடித்து வருவதால், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்