"இருமுடியில் பிளாஸ்டிக் இல்லை" என சத்தியம் : சபரிமலையில் நூதன முறையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு

சத்தியமாக இருமுடியில் பிளாஸ்டிக் இல்லை என சபரிமலை பக்தர்களிடம் அங்குள்ள போலீசார் சத்தியம் பெற்றுவருகின்றனர்.
இருமுடியில் பிளாஸ்டிக் இல்லை என சத்தியம் : சபரிமலையில் நூதன முறையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு
x
சத்தியமாக இருமுடியில் பிளாஸ்டிக் இல்லை என சபரிமலை பக்தர்களிடம் அங்குள்ள போலீசார் சத்தியம் பெற்றுவருகின்றனர். கேரளாவில் பிளாஸ்டிக்கை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மாநில அரசு, ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கும் அதே கோரிக்கையை முன் வைத்து வருகிறது. பொதுவாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இருமுடி பையில் அபிஷேக பொருட்களான  பொரி, அவல் போன்ற பொருட்களின் பாலிதீன் பைகள், பன்னீர் பாட்டில்கள் ஆகியவை மாளிகைப்புறம் பகுதியில் மலைபோல் குவிகிறது. இவை பாண்டித்தாவளம் பகுதியில், எரித்து அழிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்க, குழுவாக அமர்ந்திருக்கும் பக்தர்களிடம் 'அடுத்த ஆண்டு வரும் போது எங்கள் குழுவினர் பிளாஸ்டிக், பாலிதீன் கொண்டு வரமாட்டோம்' என சத்தியம் பெறுகின்றனர். இது நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக செங்கண்ணுார், நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் துணிப்பை கொடுக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்