மாலத்தீவு தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி

மாலத்தீவு தேர்தல் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மாலத்தீவு தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி
x
மாலத்தீவு தேர்தல் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் செயல்பாடுகள் தொடர்பாக, மாலத்தீவு தேர்தல் ஆணையத்துக்கு,  அனுபவங்களை பகிர்ந்து  கொள்வது பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் ஆலோசனைகளை அளிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையிலும் ஒத்துழைப்பு அளிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்