காளஹஸ்தி கோயிலில் அமானுஷ்ய பூஜை - 7 தமிழர்கள் உட்பட 9 பேர் கொண்ட கும்பல் கைது

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் அமாவாசை அன்று அமானுஷ்ய பூஜையில் ஈடுபட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காளஹஸ்தி கோயிலில் அமானுஷ்ய பூஜை - 7 தமிழர்கள் உட்பட 9 பேர் கொண்ட கும்பல் கைது
x
அமாவாசை அன்று தெய்வங்களின் சக்தி மற்ற நாட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு புறம் இருக்க, அன்று எதிர்மறை ஆற்றல், மற்றும் தீங்கு விளைவிக்கும் சக்திகளும் அதிக வலிமையுடன் இருக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக பேசப்படுவது உண்டு.

கார்த்திகை மாத அமாவாசை அன்று நள்ளிரவு வேளையில் காளஹஸ்தி கோயிலில் நடந்த அமானுஷ்ய பூஜை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காளஹஸ்தி சிவன் கோயிலின் துணை நிர்வாக அதிகாரி தனபால், தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேருடன் இந்த பூஜையில் ஈடுபட்டுள்ளார். துணை நிர்வாக அதிகாரி தனபால் இது போன்று நள்ளிரவு பூஜைகள் நடத்தியதற்காக கைது செய்யப்படுவது, இது முதல் முறை அல்ல. நள்ளிரவு பூஜையில் அவர் ஈடுபடுவதும் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நீடித்து வருகிறது.

அரசியல் செல்வாக்கும் பணவசதியும் படைத்த தனபால், கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். காளஹஸ்தி சிவன் கோயில் அருகே உள்ள கால பைரவர் கோயில் வளாகத்தில் நடந்த இந்த நள்ளிரவு பூஜை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார், பூஜையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, பூஜையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள், தனபால் அழைப்பின் பேரிலேயே பூஜையில் கலந்து கொண்டதாக போலீசாரிடம்  தெரிவித்துள்ளனர்.. நள்ளிரவு பூஜையில் ஈடுபட்டது எதற்காக? அமானுஷ்ய பூஜையில் தொடர்ந்து தனபால் ஈடுபடுவது ஏன் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்