குழந்தைகளை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் 4 குழந்தைகளும் ஆஜர்

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள 4 குழந்தைகளை மீட்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர்.
குழந்தைகளை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் 4 குழந்தைகளும் ஆஜர்
x
இந்த மனு விசாரணையின் போது நீதிமன்றத்தில் அந்த குழந்தைகள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நான்கு குழந்தைகளும் ஆசிரமத்தில் தங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நீதிபதி,  குழந்தைகளிடம் நடத்தப்படும் விசாரணையை தடுக்கவோ, தடை செய்யவோ கூடாது என அறிவுறுத்தினார். குழந்தைகளை சட்டப்பூர்வமான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். விசாரணையின் போது, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியும் ஆஜராக வேண்டும் என தெரிவித்தார். குற்றவியல் விசாரணையில் நீதிமன்றம் கவலைப்படவில்லை என்றும், குழந்தைகள் யாரும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தங்க வைக்கப்படுவதில்லை என்றும் நீதிபதி கூறினார்.  குழந்தைகளைப் பார்க்க போலீசார் அனுமதிப்பார்கள் என்றும், இவை அனைத்தும் பதிவு செய்யப்படும் என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்