குஜராத் நித்தி. ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தல் புகார்...

குஜராத் மாநிலத்தில் சிறுமிகளை கடத்தியதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குஜராத் நித்தி. ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தல் புகார்...
x
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல நாடுகளில் பீடம் வைத்து ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரமத்தில் இளம் பெண் பத்கர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமம் அருகில் உள்ள குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள், ஆசிரமத்துக்கு நிதி திரட்ட குழந்தை தொழிலாளர்களாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நித்தியானந்தா சிஷ்​யைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது நான்கு மகள்களை, நித்தியானந்தாவின் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். மகள்களை பார்க்கச் சென்றபோது மீட்கப்பட்ட சிறுமிகளில் இருவர் அவரது மகள்கள் என்பது தெரியவந்தது. இதனிடையே, வயது வந்த மேலும் இரு மகள்களை தேடியபோது, அவர்கள் இருவரைஆசிரமத்துக்கு நிதி திரட்டுவதற்காக அவர்கள் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மகள்களை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதனிடையே, தாங்கள் இருவரும் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கியுள்ளதாக 21 வயதான இரு மகள்களும் வீடியோ வெளியிட்டுள்ளனர். இது, மகள்களை மீட்க முயலும் தந்தைக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்