கூட்டுறவு துறையை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் : கைவிட வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

கூட்டுறவு துறையை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்களை கைவிட கோரி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கூட்டுறவு துறையை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் : கைவிட வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்
x
கூட்டுறவு துறையை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்களை கைவிட கோரி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், இரண்டு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்தியாவிற்கே முன்மாதிரியாக கேரள கூட்டுறவு துறை திகழ்வதாக கூறினார்.   ஒராண்டுக்கு முன்பு தொடங்கப்பட வேண்டிய கேரளா வங்கி, இன்னும், பத்து நாட்களில் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் புதிய திட்டங்களால் கூட்டுறவு துறை நெருக்கடியை சந்திப்பதாக குறிப்பிட்ட அவர், அத்தகைய புதிய திட்டங்களை கைவிட வலியுறுத்தி, இன்று  கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்