"ஹைதராபாத் நிஜாமின் பணம் இந்தியாவிற்கே சொந்தம்" - நிர்மலா சீதாராமன்

இங்கிலாந்து வங்கியிலுள்ள ஹைதராபாத் நிஜாமுக்கு சொந்தமான பணம் இந்தியாவுக்கே சொந்தம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் நிஜாமின் பணம் இந்தியாவிற்கே சொந்தம் - நிர்மலா சீதாராமன்
x
இங்கிலாந்து வங்கியிலுள்ள ஹைதராபாத் நிஜாமுக்கு சொந்தமான பணம் இந்தியாவுக்கே சொந்தம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் ஏழாவது நிஜாமுக்கு சொந்தமான பணம் அவரது 2 பேரன்களுக்கு சொந்தமென இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வஹாப் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த பணம் இந்தியாவிற்கே சொந்தம் என்று கூறியுள்ளார். இதற்கு உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கை தள்ளுபடி செய்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்