புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகை : பாஜக எம்.எல்.ஏ கைது

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த வலியுறுத்தி, பாஜக எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகை : பாஜக எம்.எல்.ஏ கைது
x
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த வலியுறுத்தி, பாஜக எம்எல்ஏ சாமிநாதன்  தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். மிஷன் வீதியில் இருந்து  ஊர்வலமாக புறப்பட்ட பாஜக தொண்டர்கள், அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.   போலீசார் தடுத்து நிறுத்திய போது, தள்ளு- முள்ளு நிகழ்ந்தது.பின்னர், சாமிநாதன் உள்பட அனைவரும் கைது செய்யப் பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். புதுச்சேரியில்,  38 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக்காலம் 2011- ல் முடிந்த பிறகு, மீண்டும் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படவில்லை.  

Next Story

மேலும் செய்திகள்