மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு : மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு : மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு
x
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிர சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனு ஜனவரி 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்