சபரிமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் : முதல் நாளிலேயே அதிக கூட்டம் - கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
கார்த்திகை மாத முதல் நாளான நேற்று சபரிமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இந்த வருட மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதியான நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு தீபாராதனை , புஷ்பாபிஷேகத்துடன் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. விரதமிருந்து , இருமுடி சுமந்து சபரிமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். முதல் நாளிலேயே அதிக கூட்டம் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story