முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு : பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு  : பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல்
x
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டி.என். சேஷன் மிக  சிறந்த நிர்வாக அதிகாரி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அவர் மேற்கொண்ட தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம்  வலுப்பெற்று உள்ளதாக தெரிவித்துள்ளார். டி.என். சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரது தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழும் என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜனநாயகத்துக்காக டி.என் சேஷன் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள்மத்திய அமைச்சர் சசிதரூர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி உள்ளிட்ட பலரும் டி.என்.சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். Next Story

மேலும் செய்திகள்