"உச்சநீதிமன்ற தீர்ப்பால் அயோத்தியில் ராமர் கோவில் சாத்தியமானது"

"மக்கள் இயக்கத்தில் பங்கேற்றதன் திருப்தியை உணருகிறேன்"
உச்சநீதிமன்ற தீர்ப்பால் அயோத்தியில் ராமர் கோவில் சாத்தியமானது
x
அயோத்தி தீர்ப்பை, நாட்டு மக்களுடன் இணைந்து மனதார வரவேற்பதாக, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான மக்கள் இயக்கத்தில் தனது பங்களிப்பு இருந்ததாகவும், அது முழுமை அடைந்த மகிழ்ச்சியை தற்போது தான் உணர்வதாகவும் அத்வானி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு  பின்னர் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பால் சாத்தியமாகி உள்ளதாகவும் அத்வானி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமது நிலைப்பாடு சரியானது தான் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அத்வானி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்