"அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்" : 70 ஆண்டுகால வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
x
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட  5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பினை அளித்தது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த  நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல என்று குறிப்பிட்டனர். இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு  மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்