"அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு : நாடு முழுவதும் உஷார் - தீவிர கண்காணிப்பு"

அயோத்தி வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாக இருப்பதால், உஷாராக இருக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு : நாடு முழுவதும் உஷார் - தீவிர கண்காணிப்பு
x
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17 ம் தேதி ஓய்வு பெறுவதால், எந்த நேரத்திலும், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வெளியானதும், அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக, உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 4 ஆயிரம் மத்திய போலீசார், அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், சட்டம் - ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, அதில்  அறிவுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்