"வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி"

தடைபட்டுள்ள வீட்டுவசதி திட்டங்களை நிறைவேற்ற 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி
x
* டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

* நிதிச் சுமை உள்ளிட்ட காரணங்களால்  பாதியில் நிறுத்தப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க ஏதுவாக, வீட்டுவசதி துறைக்கு நிதி ஒதுக்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.

* மத்திய அரசின் சார்பாக 10 ஆயிரம் கோடி ரூபாயும், எஸ்பிஐ வங்கி மற்றும் எல்.ஐ.சி. மூலமாக 15 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

* இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு சிமெண்ட் இரும்பு மற்றும் ஸ்டீல் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும் என்றார்.

* வீட்டுவசதி துறைக்கு அளிக்கப்படும் இந்த புத்துயிர் மூலம், பொருளாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும், மற்ற துறைகளின் பிரச்சனைகளும் களையப்படும் என்றும் நிர்மலாசீதாராமன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்