காற்று மாசுவை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு : பிரதமர் அலுவலக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர நெடுங்கால தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காற்று மாசுவை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு : பிரதமர் அலுவலக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை
x
காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் 2ஆவது நாளாக டெல்லியில் பிரதமரின் முதன்மை செயலாளர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. இதில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா  மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்றனர். காற்று மாசுவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் தெரிவித்தனர். 

பஞ்சாபில் காற்று மாசு கட்டுப்பாடு சட்டத்தை மீறுவோர் மீது வழக்குப்பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹரியானாவில், குப்பைகள் எரிப்பை குறைக்கவும், சிறப்பு குழுக்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதேபோல், டெல்லியில், முக்கிய பகுதிகளில் நீர் தெளிக்கவும்,  திறந்த வெளியில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டு, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
காற்று மாசுவை தடுக்க நிரந்தர நெடுங்கால தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்