"நடிகை சரிதா நாயர் குற்றவாளி" - காற்றாலை மோசடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
x
சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற நிறுவனம், காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி சுமார் 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடந்த 2009 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த‌து. விசாரணை முடிவில், நீதிபதிகள், சரிதா நாயர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர். பின்னர், சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்