ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி...?

ஹரியானா மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாஜக, மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி...?
x
ஹரியானா மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாஜக, மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.  

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் துவங்கியபோது, பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கு இடையே கடும் இழுபறி நீடித்தது. இதனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, கர்நாடகா போல ஆட்சியமைக்கும் முயற்சியை காங்கிரஸ் கட்சி தொடங்கியது. முன்னாள் முதலமைச்சர் புபிந்தர் சிங் ஹோடாவும் பாஜகவுக்கு எதிராக ஆட்சி அமைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மாலைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னிலை தொகுதிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இறுதியாக 40 இடங்களை பாஜக கைப்பற்றியது. இது கடந்த முறையை விட 7 இடங்கள் குறைவாகும் கடந்த முறை 3வது இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 31 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.    இதுபோல, புதிதாக களமிறங்கிய முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப்பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 7 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தளம், ஹரியானா லோகித் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 90 இடங்களை கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை. எனவே, சுயேச்சைகள் 7 பேரின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. இது தவிர, துஷ்யந்த் சவுதாலாவின் கட்சியின் ஆதரவையும் பாஜக கேட்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனவே, ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்