"வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது" - பத்மஜா சுந்துரு

வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்
x
வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார். சென்னையில், நடைபெற்ற இந்தியன் வங்கியின் நிதி நிலை குறித்த விளக்க நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  இந்தியன் வங்கியின் பொது மேலாளர் செழியன், இரண்டாம் காலாண்டில் இந்தியன் வங்கியின் மொத்த லாபம் 26 சதவீதமும், நிகரலாபம் 139 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்