திருப்பதி : பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் - 23 இடைத்தரகர்கள் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வி.ஐ.பி தரிசன டிக்கெட் வைத்திருந்த 5 பக்தர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இடைத்தரகர் ஸ்ரீநிவாஸ் நாயுடு என்பவர் மூலம் கூடூர் தொகுதி எம்எல்ஏவின் பெயரில் டிக்கெட் வாங்கியது தெரியவந்தது. இதற்காக அவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஸ்ரீநிவாஸ் நாயுடு உள்ளிட்ட 23 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story