"எதிர்மறை சிந்தனையுடன் காங்கிரஸ் தலைவர்கள்" - பிரதமர் மோடி கடும் தாக்கு

ரபேல் விமானத்தின் வருகையால், இந்தியா மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
எதிர்மறை சிந்தனையுடன் காங்கிரஸ் தலைவர்கள் - பிரதமர் மோடி கடும் தாக்கு
x
ரபேல் விமானத்தின் வருகையால், இந்தியா மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், தசரா தினத்தன்று பிரான்சிடம் இருந்து இந்தியாவிடம் முதலாவது ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டதால் இந்தியா வலிமையாகி இருப்பதாகவும் நாடே மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாகவும் அது ஏன் எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் நகருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவு பெற்றிருப்பதையும் பிரதமர் மோடி பெருமையாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்