இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் : புதுச்சேரியில் பதற்றம்

புதுச்சேரியில் இரு மீனவ கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் : புதுச்சேரியில் பதற்றம்
x
புதுச்சேரியில் இரு மீனவ கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். புதுச்சேரி கடல் பகுதியில் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நல்லவாட்டை சேர்ந்த இரு மீனவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து நல்லவாடு மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு  இடையே மோதல் ஏற்பட்டது. கிராம எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் திரண்டாதல் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் வானத்தில் துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்