87-வது விமானப்படை தின கொண்டாட்டம் : விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
பதிவு : அக்டோபர் 08, 2019, 01:24 PM
இந்திய விமானப்படை தினமான இன்று, விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படை தினமான இன்று, விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். விமானப்படையின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை தொடர்வதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் திறனை பறைசாற்றும் வகையில் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்டை நாடுகளில் நிலவும் சூழ்நிலை கவலைக்கு உரியதாக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பததோரியா தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படை தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதை புல்வாமா சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு எதிரான தீவிரவாதிகளின் நடவடிக்கைக்கு தண்டனை வழங்கும் வகையில், அரசியல் தலைமையின் செயல் உள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாதிகளை கையாளும் அரசின் நடவடிக்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக விமானப் படை தளபதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். 

இந்திய விமானப்படையின் 87-வது தொடக்க விழா கொண்டாட்டங்கள், தலைநகர் டெல்லி அருகே உள்ள காசியாபாத் ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் பாலகோட் தாக்குதலில் முக்கிய பங்காற்றிய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், மிக் பைசன் ரக விமானத்தை இயக்கினார். அவருக்கு பாதுகாப்பாக பாலகோட் தாக்குதலில் பங்கேற்ற 3 மிராஜ் 2000 ரக விமானங்கள், இரண்டு Su-30MKI  போர் விமானங்கள் பறந்து சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவருவதாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10932 views

புதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி

வரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.

22 views

ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

14 views

பிற செய்திகள்

தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் 750 கிராம் கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

25 views

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர் : வழக்கு விசாரணை டிசம்பர் 10-க்கு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி, அவதூறாக பேசிய வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி, ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜரானார்.

6 views

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

40 views

"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

11 views

சீன அதிபர் வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி வருகை காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.