கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மோடி அரசின் முயற்சி - முதல் பட்டியலை அளித்தது சுவிஸ் வரி நிர்வாக அமைப்பு

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை அந்நாடு வழங்கியுள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மோடி அரசின் முயற்சி - முதல் பட்டியலை அளித்தது சுவிஸ் வரி நிர்வாக அமைப்பு
x
இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, சுவிட்சர்லாந்து வரி நிர்வாக அமைப்பான F.T. A. இந்த தகவல்களை இந்தியாவுக்கு அளித்துள்ளது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இந்த பட்டியல் மூலம் அதனை கண்டறிய முடியும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில், தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் கணக்குகள் மற்றும் 2018 க்கு முன்பாக மூடப்பட்ட கணக்குகள் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே சாமானிய மக்களால் தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்