சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: 17 ஆண்டுகளாக நீடித்த மர்மத்தில் திடீர் திருப்பம்

சொத்துக்காக ஆறு பேர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியவர்கள் பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: 17 ஆண்டுகளாக நீடித்த மர்மத்தில் திடீர் திருப்பம்
x
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி பகுதியைச் சேர்ந்த ஜான் தாமஸ், அன்னம்மாள் தம்பதி. இவர்கள் கல்வி துறையில் பணியாற்றினர். மகன் ரோய் தாமஸ் மற்றும் உறவினர்கள் மேத்யூ, பீலி அல்பன் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு ஜான் தாமஸ் மர்மமான முறையில் இறந்தார். அவரை தொடர்ந்து அவரது மனைவி அன்னம்மாள் உட்பட 5 பேரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைய, 6 பேரும்  அடக்கம் செய்யப்பட்டனர். 

அவர்களது மரணத்தில் மர்ம இருப்பதாக கடந்த 17 ஆண்டுகளாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலீசார்  தற்போது அவர்களது உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவர்கள் ஆறு பேரும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது  தெரிய வந்தது... சொத்துக்காக அவர்களது உறவுக்கார பெண் ஜோலி, விஷம் கொடுத்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஜோலி மற்றும் அவர்களுக்கு சயனைடு விஷம்  கொடுத்த நகைக்கடை ஊழியர்கள் மேத்யூ மற்றும் பிஜி குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்