ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : பிரதமர் மோடிக்கு முன்னாள் அதிகாரிகள் 71 பேர் கடிதம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய நான்கு முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, 71 முன்னாள் அதிகாரிகள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : பிரதமர் மோடிக்கு முன்னாள் அதிகாரிகள் 71 பேர் கடிதம்
x
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு நேர்மையான முன்னாள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால், அது பணியில் உள்ள அதிகாரிகளை ஊக்கம் இழக்க செய்யும் என்று முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பழைய கோப்புகளை ஆராய்ந்தால், அதிகாரிகள் எந்த முக்கிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் தயக்க நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்