"மேகதாது அணை திட்டம், தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியமில்லை" - மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம்

மேகதாது அணை திட்டம் என்பது மின் உற்பத்தியைப் பிரதானமாகக் கொண்டது என்பதால் தமிழகத்தின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி உள்ளது.
மேகதாது அணை திட்டம், தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியமில்லை -  மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம்
x
மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதால் அது குறித்து விரிவான அறிக்கையை பதிலாக அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து, மைசூரை தலைமையிடமாகக் கொண்ட, கர்நாடக அரசின் காவிரி நீர் பகிர்வு ஒழுங்கு முறை ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. கடந்த 4ஆம் தேதி எழுதியுள்ள அந்த கடிதத்தில், நீர் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென்பதே கர்நாடகாவின் நோக்கம் என்றும் நீர்மின் உற்பத்தி திட்டம் என்பதால் தமிழகத்தின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மேகதாது அணை உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்