கேரளாவில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவிகள்

கேரளாவில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 மாணவிகள் 4 பேர் வகுப்பறையில் மதுபோதையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவிகள்
x
மூணாறு அடுத்துள்ள தேவிகுளம் என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் உளறிக் கொட்டிய அந்த மாணவிகள் குறித்து, வகுப்பாசிரியர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். உடனே 'சைல்டு லைன்' அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் அங்கு வந்து மாணவிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மாணவிகள் 4 பேரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் போதை தெளிந்ததும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோ ஓட்டும் செல்வா என்ற இளைஞர், வெள்ளை நிறத்தில் தண்ணீர் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கலந்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து 4 பேருக்கும் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் செல்வாவை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்