ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தினை 5 புள்ளி 15 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி
x
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தினை 5 புள்ளி 15 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுடெல்லியில், இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், ரெப்போ விகிதம் 5 புள்ளி 40  சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6 புள்ளி 9 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 1 சதவீதமாக குறைப்பதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார். ஏற்கனவே நடப்பாண்டில் 1 புள்ளி 10 சதவீதம் வரை ரெப்போ வட்டி குறைத்துள்ள நிலையில், தற்போது 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதால் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பல வங்கிகள் தங்களது கடன்களை, ரெப்போ வட்டி அடிப்படையிலான கடன்களாக மாற்றிக் கொண்டு இருப்பதால், தற்போதைய ரெப்போ வட்டி குறைப்பு நடவடிக்கையால், வாடிக்கையாளர் கடன்களுக்கு வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்