காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : 2,085 கைதிகள் விடுதலை - உள்துறை அமைச்சகம் தகவல்

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : 2,085 கைதிகள் விடுதலை - உள்துறை அமைச்சகம் தகவல்
x
காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து  85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காந்தியின் 150 வது பிறந்த நாள் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள சில குறிப்பிட்ட குற்றங்கள் புரிந்த சிறைக் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாமென உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. முதல் கட்டமாக 919 பேரும், இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரலில் 505 பேரும், அக்டோபர் 2-ல் தேதி மூன்றாம் கட்டமாக 611 பேரும்  விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக  உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்