கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு

பாகிஸ்தான் - கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு
x
பாகிஸ்தான் - கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சார்பில் விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பை  மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக  பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக்கின் நினைவிடம் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டி பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனித தலமான இங்கு செல்வதற்கு இந்தியா -  பாகிஸ்தான் சார்பில் சிறப்பு பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. கர்தார்பூர் காரிடர் என்று பெயரிடப்பட்ட இந்த வழி நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்