தனியார் துறை மூலம் ரயில்களை இயக்க முடிவு : வரும் 27 ஆம் தேதி ஆலோசனை கூட்டம்

இந்தியாவில் தனியார் துறை மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 27 ஆம் தேதி ரயில்வே வாரியத்தில் நடைபெறவுள்ளது.
தனியார் துறை மூலம் ரயில்களை இயக்க முடிவு : வரும் 27 ஆம் தேதி ஆலோசனை கூட்டம்
x
இந்தியாவில் தனியார் துறை மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 27 ஆம் தேதி ரயில்வே வாரியத்தில் நடைபெறவுள்ளது. மிக முக்கியமான நகரங்கள் மற்றும் பிற நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் பயணிகள் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கு லாபம் பெறும் வழித்தடத்தை தேர்வு செய்வதோடு, கட்டணத்தையும் நிர்ணயித்து கொள்ளலாம். ஒரு வழித்தடத்தில் எத்தனை முறை ரயில்களை இயக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து கொள்ளலாம். முதற்கட்டமாக மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் செகந்தராபாத்தில் சில வழித்தடங்கள் தனியாருக்கு வழங்கப்படவுள்ளன. சென்னை-பெங்களூரு, சென்னை-கோவை, சென்னை- மதுரை உள்ளிட்ட 14 இன்டர் சிட்டி வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி, சென்னை - டெல்லி, சென்னை - மும்பை, சென்னை - ஹவுரா உள்ளிட்ட பத்து நீண்ட தூர  பயண வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்