நாடு முழுவதும் வெங்காயம் விலை 'கிடுகிடு' உயர்வு - குவிண்டால் 1000 ரூபாய் விலை ஏற்றம்

வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு - குவிண்டால் 1000 ரூபாய் விலை ஏற்றம்
x
வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சந்தை நிலவரப்படி, கடந்த 2 வாரமாக ஏற்றத்தில் இருக்கும் வெங்காயம் விலை, தற்போது ஒரே நாளில் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. நாசிக் சந்தையில் இருந்து சில்லரை வர்த்தகத்திற்காக நாடு முழுவதும் வெங்காயம் கொண்டு செல்லப்படும் நிலையில்,  அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என  வியாபாரிகள் கூறியுள்ளனர்.  வட மாநிலங்களில் பெய்யும் கனமழையால் வெங்காய வரத்து குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்